அமெரிக்க நிதியமைச்சராக ஜாக் லியூ பதவியேற்றார்.
இந்நிகழ்ச்சிக்கு அதிபர் பராக் ஒபாமா முன்னிலை வகித்தார். ஜாக் லியூவுக்கு (57) துணை அதிபர் ஜோ பிடேன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நிதியமைச்சராக ஜாக் லியூவை நியமிப்பது தொடர்பாக செனட் அவையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில் ஜாக் லியூவுக்கு ஆதரவாக 71 வாக்குகளும், எதிராக 26 வாக்குகளும் கிடைத்தன.
இதற்கு முன் அதிபரின் உதவிச் செயலாளர், பட்ஜெட் மேலாண்மை அலுவலக இயக்குநர் உள்பட முக்கிய பதவிகளை ஜாக் லியூ வகித்துள்ளார்.
முன்னதாக ஜாக் லியூவை இப்பதவிக்கு நியமிப்பதாக அறிவித்து ஒபாமா செய்தியாளர்களிடையே பேசும்போது, ""நிதி மேலாண்மையில் அவருக்குள்ள திறமையும், அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் இணக்கமாக செயல்படக் கூடிய அவரின் குணமும்தான் அவரை இப்பதவியில் நியமிப்பதற்கு காரணம். நிதி விவகாரத்தில் அவரின் ஆலோசனையின்படி தொடர்ந்து செயல்படுவேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு வரவேற்பு!

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!
தமிழர்களின் இதயங்களை வென்ற பாரதிராஜா ஒரு பார்வை..!

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: 9 ஆக உயர்ந்த பலி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



