இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அப்பிராந்தியத்தில் சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல என்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனை சேர்ந்த உயர் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்தரங்கு ஒன்றில் ஆசிய பசிபிக் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களுக்கான உயர் அதிகாரி மார்க் லிப்பர்ட் கூறியதாவது:÷
""முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் ஆகியோர் இந்தியாவுடன் நட்புறவு மேம்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். இப்போது ஒபாமா தலைமையிலான அரசும், இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.
அந்தப் பிராந்தியத்தில் சமநிலையை ஏற்படுத்துவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறோம். சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக நாங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகக் கூறுவது தவறு. இன்னும் சொல்லப்போனால், சீனாவுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்த விரும்புகிறோம். அதன் மூலம்தான் அந்தப் பிராந்தியத்தில் சமநிலையை எட்ட முடியும்.
2012-ஆம் ஆண்டு அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லியோன் பனேட்டா சீனாவுக்கு சென்று இருதரப்பு பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் பங்கேற்றதை நினைவுகூர விரும்புகிறேன்.
தாய்லாந்து, மியான்மர், மலேசியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுடனும் நல்லுறவை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
வடகிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, பசிபிக் ஆகிய பகுதிகளில் உள்ள நாடுகளுடன் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம். இதனால், 2020-ஆம் ஆண்டில் அமெரிக்க கடற்படையின் 60 சதவீத கப்பல்கள் இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் நிறுத்திவைக்க வாய்ப்புள்ளது'' என்றார்.
சீனா கருத்து: முன்னதாக சீனா இந்த விவகாரத்தில் அமெரிக்காவை கடுமையாக விமர்சித்து வந்தது. "சீனாவுடன் பல்வேறு விஷயங்களில் முரண்பாடு உடைய ஜப்பான், பிலிப்பின்ஸ், வியத்நாம், இந்தியா ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா நெருக்கம் பாராட்டுகிறது.
ஆசிய கண்டத்தில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து வரும் சீனாவை கட்டுப்படுத்தத்தான் அமெரிக்கா இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது' என்று அந்நாடு குறை கூறி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு வரவேற்பு!

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!
தமிழர்களின் இதயங்களை வென்ற பாரதிராஜா ஒரு பார்வை..!

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: 9 ஆக உயர்ந்த பலி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


