சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தேடப்படும் 109 பயங்கரவாதிகள்: பாகிஸ்தான் அரசு பட்டியல் வெளியீடு

Updated On :1 மார்ச் 2013, 7:33 pm

தேடப்படும் பயங்கரவாதிகள் தொடர்பான புதிய பட்டியலை பாகிஸ்தான் அரசு வெளயிட்டுள்ளது.

அதில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-ஜாங்வி பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மாதி-உர்-ரஹ்மான், தலிபான் அமைப்பை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 109 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில், மாதி-உர்-ரஹ்மான் தலைக்கு ரூ. 1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் காவல் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இப்பட்டியலில் தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்கத்தை சேர்ந்த 34 பேர், லஷ்கர்-இ-ஜாங்வி அமைப்பை சேர்ந்த 28 பேர் இடம்பெற்றுள்ளனர். மற்றவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பிற பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள்.

சமீபத்தில் குவெட்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஷியா பிரிவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்-இ-ஜாங்வி அமைப்பை சேர்ந்தவர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மாதி-உர்-ஹர்மான் என்ற உஸ்தாத் தல்ஹா, 2004-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் செüகத் அஜீஸின் பாதுகாப்பு வாகனங்கள் மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவருக்கு கராச்சியில் நிகழ்ந்த தற்கொலைப் படைத் தாக்குதல் வழக்கிலும் தொடர்புள்ளது. இவரைப் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ. 1 கோடி பரிசு அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இவரை தவிர தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பை சேர்ந்த தய்யாபா, அல் காய்தாவை சேர்ந்த மரியா (இருவரும் 6 பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடையவர்கள்), லஷ்கர்-இ-ஜாங்வி, தலிபான் அமைப்புடன் தொடர்புடைய மன்சூர் என்ற சோட்டா இப்ராஹிம் (முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீதான தற்கொலைப் படைத் தாக்குதல் முயற்சி வழக்கில் தொடர்புடையவர். இவரைப் பிடித்து தருவோருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது), லஷ்கர்-இ-ஜாங்வி அமைப்பை சேர்ந்த க்வாரி எஹ்சான்-உல்-ஹக் உள்ளிட்ட 109 பேர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

சிபா-இ-சஹாபா, தெஹ்ரிக்-இ-ஜாஃப்ரியா, சிபா-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.