எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

ஒரு வாரத்தில் பாகிஸ்தான் திரும்புவேன்: பர்வேஸ் முஷாரஃப்

பாகிஸ்தானுக்கு ஒரு வாரத்தில் திரும்புவேன், பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று பாகிஸ்தான் முன்னாள்

Updated On :1 மார்ச் 2013, 8:05 pm

பாகிஸ்தானுக்கு ஒரு வாரத்தில் திரும்புவேன், பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியும், அந்நாட்டு முன்னாள் அதிபருமான முஷாரஃப் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி, வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் நாடு திரும்பினால் கைது செய்யப்படுவார் என பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனிடையே விரைவில் பாகிஸ்தான் திரும்பவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து துபையில் அவர் மேலும் கூறியது: முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ கொலை வழக்கு தொடர்பாக என்னைக் கைது செய்வதாக பாகிஸ்தான் அரசு கூறி வருகிறது. ஆனால் என்ன காரணத்துக்காக என்பது எனக்குத் தெரியவில்லை.

பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான தற்போதைய அரசின் பதவிக்காலம் வரும் 16ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. மே மாதத்தில் நடைபெறவுள்ள தேர்தலைக் கண்காணிக்க இடைக்கால அரசை அமைக்கும் முயற்சியில் ஆளும் கட்சியும்,எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. நான் ஒரு வாரத்துக்குள் பாகிஸ்தான் திரும்புவேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.