ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இந்தியா உள்ளிட்ட 25 நாடுகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் உள்ளிட்ட 13 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் மொத்தம் 47 நாடுகள் உள்ளன. இதில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு 25 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 13 நாடுகள் இத்தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
ஆதரவாக வாக்களித்த நாடுகள்: ஆர்ஜெண்டீனா, ஆஸ்திரியா, பெனின், பிரேஸில், சிலி, கோஸ்டாரிகா, கோட் டிவாய்ர், செக் குடியரசு, எஸ்டோனியா, ஜெர்மனி, குவாதமாலா, இந்தியா, அயர்லாந்து, இத்தாலி, லிபியா, மான்டிரீக்ரோ, பெரு, போலந்து, தென் கொரியா, மோல்டோவா, ருமேனியா, ஸியாரா லியோன், ஸ்பெயின், ஸ்விட்ஸர்லாந்து, அமெரிக்கா.
எதிர்த்து வாக்களித்தவை: காங்கோ, ஈகுவடார், இந்தோனேசியா, குவைத், மாலத்தீவுகள், மௌரிடேனியா, பாகிஸ்தான், பிலிப்பின்ஸ், கத்தார், தாய்லாந்து, உகாண்டா, ஐக்கிய அரபு அமீரகம், வெனிசூலா.
வாக்கெடுப்பில் பங்கேற்காதவை: அங்கோலா, போட்ஸ்வானா, பர்கினா ஃபாúஸா, எத்தியோப்பியா, ஜப்பான், கஜகஸ்தான், கென்யா, மலேசியா.
மத்திய ஆப்பிரிக்க நாடான கபோன், வாக்குரிமை தொடர்பான சர்ச்சை காரணமாக வாக்களிக்கவில்லை.
இந்தியாவின் பரிந்துரைகளை ஏற்க மறுப்பு: இந்தியா தரப்பில், 7 திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டன.
இலங்கையில் 13ஆவது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும், வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்த வேண்டும், போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள், அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தது தொடர்பாக உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை இந்தியா எழுத்து மூலம் தெரிவித்திருந்தது. ஆனால், இத்திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திலிப் சின்ஹா கூறியதாவது: இலங்கையில் நடைபெற்ற போர் தொடர்பாக நம்பகத்தன்மையுடனான சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். மனித உரிமை கவுன்சிலில் 2009ஆம் ஆண்டு இலங்கை அளித்த உத்தரவாதத்தை அந்நாடு முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதைக் கவனத்தில் கொண்டுள்ளோம்.
இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் சம உரிமை, அங்கீகாரம் அளிப்பதற்கான 13ஆவது சட்ட திருத்தத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என இலங்கை அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு சென்று அங்கு பார்வையிட வேண்டும்.
போர்படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதுடன், அங்குள்ள அனைத்துத் தரப்பு மக்களும் கண்ணியத்துடனும், சம உரிமை மற்றும் சமமான பாதுகாப்புடன் வாழ்வதை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நட்பு நாடாக உள்ள இலங்கையுடன் தொடர்புகளை முறித்துக் கொள்ள முடியாது. அங்குள்ள பிரச்னைகளில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம் என்றார்.
இலங்கை நிராகரிப்பு: அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை முற்றிலும் நிராகரிப்பதாக இலங்கை கூறியுள்ளது. அதன் பிரதிநிதி கூறியதாவது:
இங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தை இலங்கையால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மற்றும் தீர்மானத்தைக் கொண்டு வந்த அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மறுக்கிறது.
சமீப காலங்களில் இலங்கையில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை இத்தீர்மானம் கவனத்தில் கொள்ளவில்லை. இத்தீர்மானம் தவறான முன்மொழிவுகளைக் கொண்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற போர் 3 ஆண்டுகள் 10 மாதங்களுக்கு முன் முடிந்து விட்டது.
தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் மோதல்கள் நடைபெறுகின்றன; மனித உரிமைகள் மீறப்படுகின்றன.
பிறகு இலங்கையின் விஷயத்தில் மட்டும் ஏன் இவ்வளவு ஈடுபாடு காட்டப்படுகிறது? 30 ஆண்டுகளாக நடைபெற்ற பயங்கரவாதத்துக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வந்த நாட்டுக்கு எதிராக அளவுக்கு மீறிய வகையில் ஈடுபாடு காட்டப்படுவது ஏன் என்று இலங்கை பிரதிநிதி கேள்வியெழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
உதகை தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா காங்கிரஸ்?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


