ஈரானின் தெற்குப் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒரு குழந்தை உயிரிழந்தது. 20 பேர் காயமடைந்தனர்.
நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவானது. மினாபத் நகருக்கு 85 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் 36.44 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 கிராமங்களில் நிலநடுக்கம் கடுமையாக ஏற்பட்டதாகவும், இதனால் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹோர்முஸ்கன் மாகாண ஆளுநர் இப்ராஹிம் அஸிஸி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். முதற்கட்டத் தகவலின்படி நிலநடுக்கத்தினால் 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பல வீடுகள் சேதமடைந்ததாக "மெர் செய்தி நிறுவனம்' தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிர்வுகள் 4.1 முதல் 5.2 அலகுகளாக ரிக்டர் அளவுகோலில் பதிவாகின.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள அணு உலையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK

கடைசி நாள் பிரசாரம்!சென்னையில் முதல்வர் சாலை வலம்!

அபிஷேக் சர்மா சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 243 ரன்கள் இலக்கு!

திருச்சூர் பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

