பிராந்திய அளவில் பாதுகாப்பை பலப்படுத்த ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று ஜப்பான் வெளியுறவு அமைச்சர் இட்சுனோரி ஓனாடெரா கூறியுள்ளார்.
12-வது ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 27 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இம்மாநாட்டில் ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் இட்சுனோரி ஓனாடெரா சனிக்கிழமை பேசியதாவது:÷வலிமை மிகுந்த நாடான ஜப்பான், பிராந்திய பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் தனது பொறுப்பை உணர்ந்து செயல்படும். சர்வதேச சமூகம் எதிர்பார்க்கும் தலைமைத்துவப் பண்பை வெளிப்படுத்தும். பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். அனைத்து பிரச்னைகளுக்கும் வன்முறைக்கு பதிலாக பேச்சு மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். இதற்கு ஜப்பான் முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
சர்வதேச அளவில் சுதந்திரம், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி போன்ற அடிப்படை மதிப்பீடுகளை பலப்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பாதுகாப்புக் கொள்கையை மறுஆய்வு செய்து வருகிறோம். தேசிய பாதுகாப்பு, ராணுவம் தொடர்பான விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக பாதுகாப்புக் குழுவை அமைக்கவுள்ளோம்.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பு அவசியமானது. பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
சீனாவுடனான உறவில் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறோம். பிராந்திய அளவில் வல்லரசு என்ற முறையில் தனது பொறுப்பை உணர்ந்து சீனா செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். சீனாவுடனான பிரச்னைகளால் ஏற்படும் பதற்றத்தைத் தணிப்பதில் 10 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட தென்கிழக்கு ஆசிய கூட்டமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்போம்'' என்றார் இட்சுனோரி ஓனாடெரா.
கிழக்கு சீனக் கடல் பகுதியில் உள்ள தீவு மீது ஜப்பானும், சீனாவும் உரிமை கோருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அந்தத் தீவை சென்காகு என்ற பெயரில் ஜப்பானும், டயாவூ என்ற பெயரில் சீனாவும் அழைக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெலிகிராம் மூலம் நீட் போலி வினாத்தாள் விற்பனை! ராஜஸ்தானில் ஒருவர் கைது!

கால்பந்து உலகக் கோப்பையில் வரலாற்று வெற்றியாக மாறியாக கனடாவின் முதல் வெற்றி!
நீட் மறுதேர்வு: கோவையைத் தொடர்ந்து சேலம் மாணவி தற்கொலை!
ஐடி பங்குகள் தொடர் விற்பனையால் சென்செக்ஸ் 607 புள்ளிகளுடனும், நிஃப்டி 155 புள்ளிகள் சரிவு!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


