அமெரிக்காவின் உளவுத் துறை ரகசியங்களை வெளியிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள எட்வர்ட் ஸ்னோடெனுக்கு ரஷியா அடைக்கலம் கொடுத்துள்ளது.
அமெரிக்காவின் உளவுத் துறை ரகசியங்களை வெளியிட்டதாகக் கூறி உளவுத் துறை முன்னாள் பணியாளர் ஸ்னோடென் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் அங்கிருந்து தப்பி ரஷிய தலைநகர் மாஸ்கோ விமான நிலையத்தில் தாற்காலிகமாக தங்கியிருந்தார்.
அவர் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பி வந்து, அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை சந்திக்க வேண்டும், அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கமாட்டோம் என்று அமெரிக்க தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனாலும், அவர் ரஷியாவில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தாற்காலிகமாக தங்கியிருந்தார். அவரை தங்கள் நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ரஷிய அரசுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்து வந்தது.
இந்த நிலையில், அவர் ரஷியாவில் தங்க அடைக்கலம் அளிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்குரைஞர் அனாடலி குசெரினா வியாழக்கிழமை தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், "ரஷியாவில் ஒரு ஆண்டு தாற்காலிகமாக தங்குவதற்கு ஸ்னோடெனுக்கு ரஷிய அரசு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து, அவர் மாஸ்கோவில் உள்ள செரிமெடிவோ விமான நிலைய இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டார்' என்றார்.
இதன்மூலம் அமெரிக்கா- ரஷியாவுக்கு இடையிலான உறவு பாதிக்காது என்று ரஷிய அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


