வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

முக்கிய வெளியுறவுத்துறை பதவியில் இந்திய-அமெரிக்கரை நியமிக்க பரிந்துரை

அமெரிக்காவில், அரசியல் ராணுவ விகாரங்களுக்கான வெளியுறவுத் துணைச் செயலாளர் பதவிக்கு இந்திய-அமெரிக்கரான புனீத் தல்வாரை அதிபர் ஒபாமா பரிந்துரை செய்துள்ளார்.

Updated On :12 செப்டம்பர் 2013, 2:40 am IST

அமெரிக்காவில், அரசியல் ராணுவ விகாரங்களுக்கான வெளியுறவுத் துணைச் செயலாளர் பதவிக்கு இந்திய-அமெரிக்கரான புனீத் தல்வாரை அதிபர் ஒபாமா பரிந்துரை செய்துள்ளார்.

இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக மத்தியக் கிழக்குப் பகுதிகள் குறித்த விவகாரங்களில் அதிபர் ஒபாமாவுக்கு ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.

துணைச் செயலாளர் பதவிக்கு ஒபாமாவால் பரிந்துரை செய்யப்படும் இரண்டாவது இந்திய-அமெரிக்கர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிஷா தேசாய் பிஸ்வால் என்ற இந்திய-அமெரிக்கரை தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் பதவிக்கு ஒபாமா ஜூலை மாதம் பரிந்துரைத்தார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் சிடைத்தவுடன், இவ்விருவரும் இப்பதவிகளில் அமர்த்தப்படுவர்.

அரசியல் ராணுவ விவகாரங்களுக்கான வெளியுறவுத் துணைச் செயலாளர் பதவியில் அமர்த்தப்பட்டால், சர்வதேசப் பாதுகாப்பு, ராணுவ நடவடிக்கைகள், பாதுகாப்புத் திட்டங்கள், பாதுகாப்புத் தளவாட வர்த்தகம் போன்றவை தொடர்பான கொள்கைகளை வகுப்பதில் புனீத் தல்வார் வழிகாட்டுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.