மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

38 ஆண்டுக்கு பிறகு கிறிஸ்துமஸ் நாளன்று பௌர்ணமி: நாசா

38 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25 ஆம் தேதி முழுநிலவு (பௌர்ணமி) வருகிறது என நாசா அறிவித்துள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2015, 1:33 pm

பெர்லின்

38 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25 ஆம் தேதி முழுநிலவு (பௌர்ணமி) வருகிறது என அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.

நிகழ் ஆண்டின் கடைசி பௌர்ணமியாகவும், குளிர்காலத்தின் தொடக்கத்தில் தெரியும் முதல் பௌர்ணமியான அது  `முழு குளிர் நிலவு' (Full Cold Moon) என்றழைக்கப்படும்.

இதுபோன்ற அரிய நிகழ்வு இனி 2034 ஆம் ஆண்டுதான் நடைபெறும் என குறிப்பிட்டுள்ள நாசா, பொதுமக்கள் இந்நிகழ்வை தவற விடவேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

சந்திரனை ஆராயும் நாசாவின் (Lunar Reconnaissance Orbiter- LRO) பணி மூலம் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் நிலவின் மேற்பரப்பு குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.

எல்ஆர்ஓ பணி மூலம் அதிக திறன்வாய்ந்த 7 கருவிகள் மூலம் நிலா குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தற்போதும் கிறிஸ்துமஸ் நாளன்று நிகழும் அரிய நிகழ்வும் ஆராயப்படும் என நாசா அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.