மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் டுல்ட்டப் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பட்டாசு சந்தையில் நேற்று நிகழ்ந்த வெடி விபத்தில் 29 பேர் பலியானார்கள்
மெக்சிகோவின் தலைநகரான மெக்சிகோ சிட்டியின் வடக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள டுல்ட்டப் நகரில் அமைந்துள்ளது பப்லிட்டோ பட்டாசு சந்தை. இங்கே உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 3 மணி அளவில் கடும்வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 26 பேர் பலியானார்கள்.
இது குறித்து மெக்சிகோ மாகாண ஆளுநர் எருவெய்ல் அவிலா செய்தியாளர் சந்திப்பில்கூறியதாவது:
பப்லிட்டோ பட்டாசு சந்தையில் நடந்த வெடி விபத்தில் 29 பேர் பலியானார்கள். சம்பவ இடத்திலேயே 26 பேரும், பின்னர் மருத்துவமனையில் 3 பேரும் மரணமடைந்தனர். இந்த விபத்தில் 70 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காசிதா்மத்தில் இளைஞருக்கு வெட்டு: இரு தரப்பினா் மோதல்

இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரா் கோயிலில் தேரோட்டம்

புளியறை அருகே முதியவா் வெட்டிக்கொலை

கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


