உங்களது 'ஆப் லைன்' நடவடிக்கைகள் குறித்தும் தகவல் சேகரிக்கும் பேஸ்புக்!   

பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக் உங்களது 'ஆன்லைன்' நடவடிக்கைகள் மட்டும் அல்ல, உங்களது ஆப்லைன் நடவடிக்கைகளையும் பிற நிறுவனங்களிடம் பணம் கொடுத்து...
உங்களது 'ஆப் லைன்' நடவடிக்கைகள் குறித்தும் தகவல் சேகரிக்கும் பேஸ்புக்!   

நியூயார்க்: பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக் உங்களது 'ஆன்லைன்' நடவடிக்கைகள் மட்டும் அல்ல, உங்களது ஆப்லைன் நடவடிக்கைகளையும் பிற நிறுவனங்களிடம் பணம் கொடுத்து சேகரிக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல்  வெளியாகியுள்ளது.

இது குறித்து 'ப்ரோ பப்ளிகா' என்னும் செய்தித்தாள் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் நீங்கள் நேரம் செலவழிக்கும் பொழுது அது உங்களது 'ஆன்லைன்' நடவடிக்கைகள் மூலம் உங்களை பற்றிய தகவல்களை சேகரிக்கிறது என்பது அநேகம் பேர் அறிந்த செய்தி. ஆனால் நீங்கள் 'ஆப்லைனில்' இருக்கும் போது கூட அது உங்களை பற்றிய தகவல்களை வேறு சில நிறுவனங்கள் மூலம் பணம் குடுத்து சேகரிக்கிறது என்பது பலரும் அறியாத செய்தி.

பேஸ்புக் தனது அல்காரிதங்கள் மூலம் பயனாளர்களைப் பற்றிய பல்வேறு தகவல்களை சேகரிக்கிறது. அவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்கள் அடிப்படையில் பயனாளர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்படுகின்றனர். அவர்களைப்பற்றிய விபரங்கள் பேஸ்புக்குடன் தொடர்பில் உள்ள பல்வேறு விளம்பரதாரர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன.

இவ்வாறு கொடுக்கப்படும் தகவல்கள் மூலமாக அவர்கள் நமக்கு விளமபரங்களை  காண்பிக்கச் செய்கின்றனர். இந்நிலையில் தற்பொழுது மேலும் தனிப்பட்ட தகவல்களைத் திரட்டும் நோக்கில், பயனாளர்களின் சம்பளம் எவ்வளவு, எந்த கடைகளில் பொருட்கள் வாங்குகிறார்கள், எத்தனை கிரெடிட் கார்டுகள் வைத்திருக்கிறார்கள் என்ற விபரங்கள் வரை வெளியிலிருக்கும் சில 'வணிக ரீதியில் தகவல் விற்கும்' நிறுவனங்கள் மூலம், பணம் கொடுத்து தகவல்கள் திரட்டபப்டுகின்றன என்று   அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது

பயனாளர்களின் வசதிக்காக சிறிய அளவில் மட்டும் தகவல்கள் திரட்டப்படுவதாக தனது தளத்தில் பேஸ்புக் தெரிவிக்கிறது. ஆனால் இவ்வளவு அதிகமான தகவல்கள் அதுவும் ஆப்லைன் மூலமாக திரட்டப்படுவதை பற்றி அது எதுவும் தெரிவிப்பதில்லை என்பது தவறானது என்று துறை சார் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com