/

அமெரிக்கா: நடுவானில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

அமெரிக்காவில், நடு வானில் பறந்து கொண்டிருந்த இரண்டு சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கி விமானங்கள் கடலில் விழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Updated On :6 பிப்ரவரி 2016, 8:55 am

அமெரிக்காவில், நடு வானில் பறந்து கொண்டிருந்த இரண்டு சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கி விமானங்கள் கடலில் விழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி மதியம் 3.30 மணியளவில் துறைமுக நுழைவு வாயிலில் இருந்து இரண்டு மைல் தொலைவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

விமானங்களில் பயணம் செய்தவர்களைப் பற்றியோ, உயிரிழப்பு பற்றியோ இதுவரை எந்த தகவலும் இல்லை.

சுமார் 20க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள் சம்பவ பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானத்தின் சில பாகங்கள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.