பாகிஸ்தானுக்கு 18 புதிய எப்-16 ரக போர் விமானங்களை அமெரிக்கா வழங்குவதற்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவரிடம் பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா போர் விமானங்களை வழங்குவதில் இந்தியாவின் அதிருப்தியை வெளியிட இருப்பதாகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு 18 புதிய எப்-16 ரக போர் விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு வகை செய்யும் கெர்ரி-லுகர் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவில் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி அளிப்பதற்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் மிகவும் கவலை தெரிவித்துள்ளது. இத்தகைய பின்னணியில், பாகிஸ்தானுக்கு புதிய எப்-16 ரக போர் விமானம் வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள 18 புதிய எப்-16 ரக போர் விமானங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் வழங்கப்பட்டுவிடும் என அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்ஐஆா் பணிகளாலும் வாக்குப்பதிவு அதிகரிப்பு!

வாக்கு சதவிகிதம் அதிகரிப்பா? தலைமைத் தேர்தல் ஆணையரின் நகைச்சுவை: திமுக

அதிருப்திக்கு மத்தியிலும் நரிக்குறவா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் பாத்திரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

