பதான்கோட் விமானப் படை தாக்குதல்: பாகிஸ்தானில் முதல் தகவல் அறிக்கை பதிவு

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப் படைத் தளத்தில் ஜனவரி 2ம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் காவல்துறையின் தீவிரவாத தடுப்புத் துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Updated on
1 min read

பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் இருக்கும் பஞ்சாப்பின் குஜ்ரன்வாலா நகரத்தில் உள்ள காவல்நிலையத்தில் 06/2016 என்ற பதிவெண்ணுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் மீது, கொலை, கொலை முயற்சி, பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் நாஸர் கானிடம் இந்திய அதிகாரி அஜித் அளித்த தகவல்களின் அடிப்படையில், பதான்கோட் தாக்குதல் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தும் வகையில், இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com