இஸ்தான்புல்: துருக்கியின் இஸ்தான்புல் நகர விமான நிலையத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. 239-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதையடுத்து, போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதில், பயங்கரவாதிகள் தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிபொருட்களை வெடிக்க செய்தனர். இதில் 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 239-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பவத்தின்போது விமான நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன. அதில், விமான நிலைய நுழைவு வாயிலில் குண்டு வெடிக்கும் காட்சியும், மற்றொரு விடியோவில் பயணிகளை நோக்கி சுட்டபடி வரும் பயங்கரவாதியை காவலர் ஒருவர் சுட்டு வீழ்த்துவது, கிழே விழுந்த அந்த பயங்கரவாதி தன் உடலில் பொருத்தியிருந்த வெடிபொருளை வெடிக்கச் செய்வது ஆகிய காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.