துபாயில் இருந்து ரஷ்யா வந்த விமானம், ரோஸ்டவ்-ஆன் நகரில் தரையிறங்கும் போது வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 61 பேர் பலியாகியுள்ளனர்.
ரோஸ்டவ்-ஆன் நகரில் உள்ள டான் விமான நிலையத்தில் போயிங் 737-800 ரகத்தைச் சேர்ந்த ஜெட் விமானம், தரையிறங்கும் போது 50-100 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து நொறுங்கியுள்ளதாக பிளய் துபாய் இதனை உறுதி செய்துள்ளது.
விமான அட்டவணைப்படி விமானம் அதிகாலை 1.20-க்கு தரையிறக்க வேண்டும். ஆனால் 3.50-க்கு வெடித்துச் சிதறியுள்ளது. 6 விமான ஊழியர்கள், 55 பயணிகள் உள்பட 61 பேர் பலியாகியுள்ளனர்.

முதல் முறையாகத் தரையிறங்க முயற்சித்தபோது, கடுமையான பனிமூட்டத்தால் ஓடுபாதை தெளிவாக தெரியவில்லை. எனவே, அந்த முயற்சி கைவிடப்பட்டது. இரண்டாவது முறையாகத் தரையிறங்க முயற்சித்தபோதும் இதேநிலை நீடித்ததால், ஓடுபாதையைவிட்டு சுமார் 100 அடிதூரம் விலகித் தீ விபத்து ஏற்பட்டதாக தெற்கு மண்டல தலைமை அதிகாரி இகோர் ஓடர் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் பயணம் செய்தவர்களின் பெரும்பாலும் ரோஸ்டவ்-ஆன் பகுதிகளில் வசிப்பவர்கள். இதில், வெளிநாட்டைச் சேர்ந்த சிலரும் இருந்திருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை ரோஸ்டவ்-ஆன் நகரில் பலத்த காற்று வீசி வந்த நிலையில், புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், ஆறுக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, மாஸ்கோவில் இருந்து வரும் விமானங்கள் கிராஸ்னோடர் விமான நிலையத்துக்கு மாற்றி விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்திரைத் திருவிழா: வைகை அணையிலிருந்து நீர் திறப்பு!

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்!
ஐ.நா. அவைத் தலைவர் அனலேனா இந்தியா வருகை!
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை