தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பிரஸல்ஸ் விமான நிலையத் தாக்குதல்: 21 பேர் பலி

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸின் விமான நிலையத்தில் இன்று பயங்கர சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் இரண்டு அடுத்தடுத்து வெடித்தன. இதில் 21 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On :22 மார்ச் 2016, 10:32 am

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸின் விமான நிலையத்தில் இன்று பயங்கர சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் இரண்டு அடுத்தடுத்து வெடித்தன. இதில் 21 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த குண்டு வெடிப்பில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் மிக பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சி அளித்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

பாரிஸ் தாக்குதல் குற்றவாளி பிரஸல்ஸில் கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்த நாளே இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்த உடனே, நாடு முழுவதும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, அடுத்த வெடிகுண்டு ஐரோப்பியன் யூனியன் கட்டடத்துக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டது.

உடனடியாக விமான நிலையமும், ரயில் நிலையமும் மூடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.