தொழில்நுட்பம் செய்த மாயம்: விண்வெளியில் இருந்தே வாக்களித்த அமெரிக்க வீரர்கள்

அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், விண்வெளியில் தங்கி ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வரும் அமெரிக்க விண்வெளி வீரர்கள் இரண்டு பேர் அங்கிருந்தே தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
தொழில்நுட்பம் செய்த மாயம்: விண்வெளியில் இருந்தே வாக்களித்த அமெரிக்க வீரர்கள்


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், விண்வெளியில் தங்கி ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வரும் அமெரிக்க விண்வெளி வீரர்கள் இரண்டு பேர் அங்கிருந்தே தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

விண்வெளியில் நாசாவால் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் (ஐஎஸ்எஸ்) தங்கி பணியாற்றும் ஷானே கிம்ப்ராஹ், அங்கிருந்தே தனது வாக்கினை செலுத்தியுள்ளார். மற்றொரு விண்வெளி வீரர் ரூபின்ஸ் கடந்த வாரம் பூமிக்கு திரும்பி வந்து தனது வாக்கினை செலுத்தியுள்ளார் என்று நாசா தெரிவித்துள்ளது.

விண்வெளி வீரர்கள் தொழில்நுட்ப உதவியோடு வாக்களிக்க வகை செய்யும் சட்டம் கடந்த 1997ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டதை அடுத்து, விண்வெளி வீரர்களும் தங்களது வாக்குரிமையை செலுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com