சீனாவில் மின் உலை கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 67 பேர் பலி!
சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் கட்டப்பட்டு வந்த மின் உலை கட்டிடம் ஓன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 67 பேர் பலியாகினர்.


பீஜிங் சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் கட்டப்பட்டு வந்த மின் உலை கட்டிடம் ஓன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 67 பேர் பலியாகினர்.
சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் யிசுன் நகரத்தில் பிங்செங் மின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 70 பேர் இந்த கட்டுமானப்பணிகளில ஈடுபட்டு வந்தனர். திடீரென இன்று காலை அதன் தரைத்தளப்பகுதி சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 67 பேர் பலியாகினர்.இருவர் படுகாயமடைந்தனர்.
ஆம்புலன்ஸ் மற்றும் மீட்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...