/

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷியா 'அவுட்' !

ஐ.நா. மனித உரிமை கவுன்சிளுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் ரகசிய வாக்குப்பதிவில், ரஷ்யா குறைந்த அளவிலான வாக்குகளை பெற்றதன் காரணமாக மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேறுகிறது

News image
Updated On :30 அக்டோபர் 2016, 9:06 am

DIN

நியூயார்க்: ஐ.நா. மனித உரிமை கவுன்சிளுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் ரகசிய வாக்குப்பதிவில் ரஷ்யா குறைந்த அளவிலான வாக்குகளை பெற்றதன் காரணமாக மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேறுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இடம்பெற்றுள்ள 47 நாடுகளில் 14 நாடுகளின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இவரக்ளுக்கு பதிலாக புதிய புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் ரகசிய வாக்குப்பதிவு நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.சபை தலைமை நிலையத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்றுள்ள 193 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். பிரேசில், சீனா, குரோஷியா, கியூபா, எகிப்து, ஹங்கேரி. ஈராக், ஜப்பான், ருவான்டா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துனிசியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த தேர்தலில் வெற்றிபெற்று, 1-1-2017 முதல் செயல்படவுள்ள மனித உரிமை கவுன்சிலில் இடம்பிடித்துள்ளன.

கிழக்கு ஐரோப்பா கண்டத்தின் சார்பில் இந்த அமைப்பில் மீண்டும் இடம்பெறுவதற்காக ரஷியாவும் போட்டியிட்டது.  இரண்டு இருக்கைகளுக்காக ரஷியாவை எதிர்த்து  குரோஷியாவும், ஹங்கேரியும் போட்டியிட்டன. இதில் ஹங்கேரிக்கு 144 ஓட்டுகளும், குரோஷியாவுக்கு 114 ஓட்டுகளும் கிடைத்தன. ரஷ்யா வெறும் 112 ஓட்டுகளை பெற்றதன காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேறும் சூழல் உண்டாகியுள்ளது.

சிரியாவில் அதிபர் அல் பஷாருக்கு ஆதரவாக களமிறங்கியதன் காரணமாக, அங்கே  நடைபெற்று வரும்   உள்நாட்டுப் போரை  ரஷ்யா ஊக்குவித்து வருவதால், அந்நாட்டை ஆதரித்து பிறநாடுகள் வாக்களிக்கவில்லை என்று கருதப்படுகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.