
கேஸ் சிலிண்டர்கள் நிரப்பப்பட்ட காரை கொண்டு தீவிரவாத தாக்குதல் நடத்த முயன்ற மூன்று இளம்பெண்களை பிரான்சின் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
பாரீஸுக்கு தென் கிழக்கே உள்ள நோட்ரே தாம் இடத்தில் கேஸ் சிலிண்டர்கள் நிரப்பப்பட்ட கார் ஓன்று அனாதையாக நிற்பதாக வந்த தகவலை அடுத்து விரைந்து சென்ற போலீசார் காரை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பதிவு எண் எதுவும் இல்லாத அந்த காரில் இருந்து, ஏழு சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டன.மூன்று கேன்களில் டீசலும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டது. அரபி மொழியில் எழுதப்பட்ட சில ஆவணங்களும் அந்த காரிலிருந்து கைப்பற்றப்பட்டதாக காவல் துறை தெரிவிக்கிறது. விசாரணைக்கு பிறகு இந்த சம்பவம் தொடர்பாக மூன்று இளம் பெண்களை கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் குறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட், சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாவது:
கேஸ் சிலிண்டர்கள் நிரப்பப்பட்ட கார் கைவிட்டு செல்லப்பட்ட விவகாரத்தில் மூன்று இளம்பெண்கள் வியாழனன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்முறையே 19, 23 மற்றும் 39 வயதுடையவர்கள்.அவர்கள் கண்டிப்பாக ஒரு கொடூரமான தாக்குதலை நடத்த திட்டமிருந்தனர்.
கைது செய்ய முயன்ற பொழுது பெண் ஒருவர் காவலரை கத்தியால் தாக்கியதால் அவர் தோளில் காயம் அடைந்தார்.
அவர்கள் மூவரில் 19 வயது இளம்பெண் ஏற்கனவே சிரியாவுக்கு சட்ட விரோதமாக செல்ல முயன்ற குற்றத்திற்காக போலீசாரின் கண்காணிப்பில் உள்ளவர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.