ஒத்தி வைக்கப்படுகிறதா இஸ்லாமாபாத் சார்க் மாநாடு?

ஒத்தி வைக்கப்படுகிறதா இஸ்லாமாபாத் சார்க் மாநாடு?

நான்கு உறுப்பு நாடுகள் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளதால் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த 19-ஆவது சார்க் மாநாடு ஒத்திவைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

நான்கு உறுப்பு நாடுகள் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளதால் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த 19-ஆவது சார்க் மாநாடு ஒத்திவைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வரும் நவம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் சார்க் அமைப்பின் 19-ஆவது சார்க் மாநாடு நடக்க இருந்தது. ஆனால் உரி தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானின் பங்கு இருப்பதை சுட்டிக்காட்டிய இந்தியா,மாநாட்டில்பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பிராந்தியத்தில் வன்முறை சம்பவங்களுக்கான தூண்டுதல் நிகழ்வதை காரணம் காட்டி ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளும் மாநாட்டில் பங்கேறக்கப் போவதில்லை என்று அறிவித்தன.

தற்போது சார்க் அமைப்புக்கு நேபாளம் தலைமை வகித்து வருகிறது. குறிப்பிட்ட நான்கு நாடுகளிலிருந்து பங்கேற்கவியலாமையை சுட்டிக்காட்டி கடிதங்கள் வந்திருப்பதை  உறுதி செய்த நேபாளம் இந்த விஷயத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

சார்க் அமைப்பின் விதிகளின் படி அங்கத்தினராயிருக்கும் நாடுகளிடையே கருத்தொற்றுமை மிகவும் முக்கியம் என்பதால், இந்த மாநாடு தள்ளி வைக்ககப்படுவதற்கோ அலல்து ரத்து செய்யப்படுவதற்கோ வாய்ப்புகள் அதிகம் உண்டு என்று தெரிய வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com