பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ஏஞ்சலினா ஜூலி போல ஆக நினைத்து 50 அறுவை சிகிச்சைகள் செய்த இளம்பெண்: விளைவு என்ன தெரியுமா? 

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி போல ஆக நினைத்து 50 முறை அறுவை சிகிச்சைகள் செயது கொண்ட ஈரானிய இளம்பெண் ஒருவரின் முகம் மாற்றம் அடைந்து கோரமாக காட்சியளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2017, 11:52 am

வாஷிங்டன்: பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி போல ஆக நினைத்து 50 முறை அறுவை சிகிச்சைகள் செயது கொண்ட ஈரானிய இளம்பெண் ஒருவரின் முகம் மாற்றம் அடைந்து கோரமாக காட்சியளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஏஞ்சலினா ஜூலி. டாம்ப் ரைடர், மிஸ்டர் & மிசஸ் ஸ்மித் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவருக்கு உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

Story image

ஈரான் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஷாகர் தபார் (19). இவர் ஏஞ்சலினா ஜூலியின் தீவிர ரசிகை. எந்த அளவுக்கு ரசிகை என்றால், ஏஞ்சலினாவிற்காக எதையும் செய்வேன் என்ற மனப்பான்மை கொண்டவர்.

அதன் உச்சகட்டமாக தன்னை ஏஞ்சலினா போல மாற்றிக் கொள்ள நினைத்தார். ஷாகர் தபார். அதற்காக தொடர் அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளவும் தயாரானார். கடந்த சில மாதங்களாக சீரான இடைவெளிகளில் 50 முறை அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டுள்ளார்.

இது மட்டும் போதாது என்று ஏஞ்சலினா போலவே உடல் அமைப்பிலும் காட்சி தர வேண்டி, கடுமையான  உணவு கட்டுப்பாட்டையும் மேற்கொண்டுள்ளார், இதன் காரணமாக தனது உடல் எடையில் 40 கிலோவை குறைத்து உள்ளார்.

இந்நிலையில் அறுவை  சிகிச்சைக்கு பின்னர் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை ஷாகர் தபார் இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். இதனால்  இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

ஆனால் அவரின் இந்த செயலுக்காகவும், அவரது மாறிய தோற்றம் குறித்தும் இன்ஸ்ட்டாகிராமில்  பலரும் அவரைக்  கடுமையாக விமர்சித்து காணப்படுகிறார்கள்.

இந்த தகவலை லண்டனில் இருந்து வெளிவரும் 'தி சன்' பத்திரிகை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.