காங்கோ குடியரசின் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில், 100-க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக உகாண்டா ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராணுவச் செய்தியாளர் ரிச்சர் கேர்மைர் கூறுகையில், 'உகாண்டாவில் கிளர்ச்சி செய்து வரும் முஸ்லிம் அமைப்பினருக்கு எதிராக காங்கோ குடியரசில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 100-க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். அவரது ஆயுதக் கிடங்குகள் அழிக்கப்பட்டன' என்றார்.
ஜனநாயக படைக் கூட்டணி என்ற அந்த அமைப்பு, இதுவரை 14 ஐ.நா. அமைதிப் படையினரை படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.