புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்கொலைப்படை தாக்குதல்: 40 பேர் பலி! 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இஸ்லாமியப் பள்ளி ஒன்றின் வளாகத்தில் வியாழன் அன்று காலை நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40 பேர் பலியாகினர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 9:19 am

காபூல்:  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இஸ்லாமியப் பள்ளி ஒன்றின் வளாகத்தில் வியாழன் அன்று காலை நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40 பேர் பலியாகினர்.

இந்த தற்கொலைப்படை தாக்குதல் குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நஸ்ரத் ரஹிமி தொலைக்காட்சி செய்தியாளரிடம் கூறியதாவது:

காபூலின் காலா இ-நசர் என்னும் பகுதியில் வியாழன் அன்று காலை 10.30 மணியளவில் இந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இஸ்லாமியப் பள்ளி ஒன்று அமைந்திருந்த வளாகத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. அதே வளாகத்தில் சடா இ-ஆப்கானிஸ்தான் என்னும் செய்தி நிறுவன அலுவலகமும் அமைந்துள்ளது.

இந்த தாக்குதலில் 40 பேர் பலியாகினர்.மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும் ஆவர்.  இந்த கொடூர  தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.