பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அதிபர் டிரம்ப் பயன்படுத்தும் அலைபேசியால் அமெரிக்காவுக்கு ஆபத்து?

அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தும் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள  பழைய ஆண்ட்ராய்ட் அலைபேசியின் மூலம் அமெரிக்க பாதுகாப்பு குறித்த ரகசிய தகவல்கள் கசியக்கூடும் ...

News image
Updated On :26 ஜனவரி 2017, 6:43 am

DIN

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தும் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள  பழைய ஆண்ட்ராய்ட் அலைபேசியின் மூலம் அமெரிக்க பாதுகாப்பு குறித்த ரகசிய தகவல்கள் கசியக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் 45-ஆவது அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.   அவர் இன்னும் சமூக வலைத்தளமான டிவிட்டரில் தனது கருத்துக்களை பதிவு செய்வதற்கு அவரிடம் இருக்கக் கூடிய பழைய, பாதுகாப்பு குறைவான ஆண்ட்ராய்ட் அலைபேசியைத்தான் பயன்படுத்தி வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.  

இது குறித்த தகவல் புதன்கிழமை அன்று அமெரிக்காவின் முக்கிய நாளிதழான நியூயார்க் டைம்ஸில் வெளியானது. ட்ரம்பின் இந்த செய்கை மூலம் அவர் பற்றிய தகவல்கள் எளிதாக வெளியாகும் அபாயம் இருப்பதுடன், அரசாங்க தகவல்கள் வெளியானால் தேச பாதுகாப்பு தொடர்பான சிக்கல் எழவும் வாய்ப்புள்ளது என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

அவர் உடனடியாக தன்னுடைய பழைய மாடல் அலைபேசிக்குப் பதிலாக, நவீன வசதிகளுடன் அவருக்கு வழங்கபட்டுள்ள பாதுகாப்பான அலைபேசியை பயன்படுத்தவேண்டும் என்று  சக கட்சியினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் அவர் தனக்கு முன் அதிபராக பணியாற்றிய ஒபாமா போன்று மறு வடிவமைப்பு செய்யப்பட்ட சிறப்பு அலைபேசியை பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒபாமா முதலில் மறு வடிவமைப்பு செய்யப்பட்டபிளாக்பெர்ரி அலைபேசியையும், பின்னர் ஆப்பிள் போனையும் பயன்படுத்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.