மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஈரான் இரட்டை தாக்குதல்:  சுட்டுக் கொல்லப்பட்ட முக்கிய குற்றவாளி! 

கடந்த வாரம் ஈரான் நாட்டு பாராளுமன்றம் மற்றும் அருகே உள்ள வழிபட்டுத் தலம் என இரண்டு இடடங்களில் நடந்த தற்கொலை படை தாக்குதலுக்கு, பின்னணியில் மூளையாக இருந்து செயல்பட்ட... 

News image
Updated On :11 ஜூன் 2017, 10:03 am

DIN

தெஹ்ரான்: கடந்த வாரம் ஈரான் நாட்டு பாராளுமன்றம் மற்றும் அருகே உள்ள வழிபட்டுத் தலம் என இரண்டு இடடங்களில் நடந்த தற்கொலை படை தாக்குதலுக்கு, பின்னணியில் மூளையாக இருந்து செயல்பட்ட முக்கிய தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.

ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் அந்நாட்டு பாராளுமன்றம் அமைந்துள்ளது. அருகே  மறைந்த புரட்சியாளரும் முக்கிய மதகுருவுமான கோமெனியின் அடக்கத் தலம் அமைந்துள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் கடந்த புதன்கிழமை அன்று புகுந்த தற்கொலை படை தீவிரவாதிகள் , குண்டுகளை வெடிக்கச் செய்ததோடு, துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.

இந்த இரண்டு தாக்குதல்களில் சேர்த்து பாதுகாப்பு படையைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் உட்பட மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமாக இருந்த முக்கிய குற்றவாளியை, ஈரான் நாட்டு  பாதுகாப்பு படையினர் நேற்று இரவு சுட்டுக்கொன்று விட்டனர் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மக்மூத் அலாவி தரப்பிலிருந்து  செய்தி நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.