6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சீனாவில் சிறுவர் பள்ளி அருகே குண்டுவெடிப்பு: 8 பேர் பலி; 65 பேர் காயம்

சீனாவில் சிறுவர் பள்ளி ஒன்றின் நுழைவு வாயில் அருகே நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில், 8 பேர் உயிரிழந்தனர். 65 பேர் காயமடைந்தனர்.

News image
Updated On :16 ஜூன் 2017, 4:58 am

DIN

சீனாவில் சிறுவர் பள்ளி ஒன்றின் நுழைவு வாயில் அருகே நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில், 8 பேர் உயிரிழந்தனர். 65 பேர் காயமடைந்தனர்.

கிழக்கு சீனாவின் ஜியாங்சூ கடலோர மாகாணத்தில் உள்ள ஃபெங்ஸியான் நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறுவர் பள்ளியின் நுழைவு வாயில் அருகே சாலையோரமாக, கேஸ் சிலிண்டர் வெடிக்கும் பயங்கர சத்தம் கேட்டதாகவும், இதைத்தொடர்ந்து பெரும் விபத்து நேரிட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறுவர், சிறுமியர் மற்றும் பொதுமக்கள் உள்பட 65க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர் அனைவரும் அருகில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த பகுதி முழுவதும் ரத்தமாக காட்சியளிப்பதாகவும், இதற்கு தீவிரவாத இயக்கம் ஏதேனும் காரணமா, என்பது பற்றி விசாரித்து வருவதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் குழந்தைகள் அல்லது ஆசிரியர்கள் யாரும் இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

குண்டுவெடிப்பு ஈடுபட்டவர்களை போலீஸார் அடையாளம் கண்டுள்ளதாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.