ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆடும் மனிதனும் கலந்து பிறந்த ஆட்டுக்குட்டி: அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்!

தென் ஆப்பிரிக்காவில் ஆடு ஒன்றிற்கு பிறந்த குட்டியானது, ஆடும் மனிதனும் சேர்ந்த கலவை போன்று இருந்ததால், அதனைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சிக்குளாகினர்.

News image
Updated On :23 ஜூன் 2017, 10:52 am

DIN

கிறிஸ் ஹானி (தென் ஆப்பிரிக்கா): தென் ஆப்பிரிக்காவில் ஆடு ஒன்றிற்கு பிறந்த குட்டியானது, ஆடும் மனிதனும் சேர்ந்த கலவை போன்று இருந்ததால், அதனைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சிக்குளாகினர்.

தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது கிறிஸ் ஹானி மாவட்டம். இங்கு அமைந்துள்ள சிறிய கிராமம் லேடி பிரரி. இங்கு அதிகமான அளவில் விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.

தற்பொழுது இங்குள்ள ஆடு ஒன்றிற்கு பிறந்த குட்டிதான் மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது பாதி மனிதன் மற்றும் பாதி ஆடு போன்ற உடலமைப்புடன் இந்த குட்டி காணப்படுவதுதான் இதற்கு காரணம். இதைக் கண்டவுடன் கிராம மக்கள் அனைவரும் இந்த குட்டியானது சாத்தானால் அனுப்பபட்டுள்ளது என்று  பேசிக் கொண்டதால், கிராமத்தில் பரபரப்பு உண்டானது

இது தொடர்பான தகவல் தெரிய வந்தவுடன், கிராமப்புற வளர்ச்சி அதிகாரிகள் உடனடியாக மருத்துவர் ஒருவருடன் அங்கு விரைந்து வந்தனர். சோதனைக்கு பின்னர் மருத்துவர் லல்லபு கூறியதாவது:

இது கண்டிப்பாக ஆட்டுக்கு குட்டிதான். மக்கள் பயப்பட வேண்டாம். மேலும் இந்த குட்டி கருவிலிருக்கும் பொழுது, அதன் தாய்க்கு ரிப்ட் வேலி என்ற நோய் பாதிப்பு இருந்துள்ளது. இத்துடன் குட்டியும் பிறக்கும் பொழுதே இறந்த நிலையில் பிறந்துள்ளது. இருந்தும் மக்களின் சந்தேகம் தீராத காரணத்தால், அந்த குட்டியின் பிரேத பரிசோதனை அறிக்கையை மக்கள் முன்னிலையில் தெரியப்படுத்தவுள்ளதாக அந்த மருத்துவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.