பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஜனாதிபதியை ஓட்டம் பிடிக்க வைத்த 'அரண்மனை பேய்'!

குடியிருக்கும் வீட்டில் பேய் தொல்லை இருப்பதாக எண்ணி அஞ்சி பிரேசில் ஜனாதிபதி தான் குடியிருந்த வீட்டைக் காலி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :13 மார்ச் 2017, 8:36 am

DIN

ரியோ டி ஜெனிரோ: குடியிருக்கும் வீட்டில் பேய் தொல்லை இருப்பதாக எண்ணி அஞ்சி பிரேசில் ஜனாதிபதி தான் குடியிருந்த வீட்டைக் காலி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டின் ஜனாதிபதி மிசெல் தெமர் (76). இவர் தன்னுடைய மனைவி மர்சிலா (33) மற்றும் தனது மகன் மிசெல் சின்கோ (7) ஆகியோருடன் அங்குள்ள ஆல்வோரட என்னும் இடத்தில் உள்ள அரண்மனை ஒன்றில் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக அதிபரும், அவரது மனைவியும் அந்த அரண்மனையில் சில இயல்புக்கு மாறான விஷயங்களை தொடர்ச்சியாக உணர்ந்துள்ளனர். இதனால் சரியாக தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

இதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறியும் பொருட்டு ஜனாதிபதியின் மனைவி மர்சிலா கிறிஸ்துவ பாதிரியார் ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அவர் மூலம் சில மாந்த்ரீக சோதனைகள் செய்துள்ளதாகவும் தெரிகிறது.

இதன் காரணமாக அச்சமடைந்த ஜனாதிபதி அந்த வீட்டை காலி செய்வது என்று முடிவு எடுத்து விட்டார்.  தற்போது அவர் துணை ஜனாதிபதிக்கான இல்லத்துக்கு தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார்.

பேய்பயம் காரணமாக குடி இருந்த  வீட்டை காலி செய்துள்ள ஜனாதிபதியின் இந்த செயல் அந்நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.