பறவை மோதியதால் ஏர் இந்தியா விமானம் லண்டனில் அவசர தரையிறக்கம்
பறவை மோதியதால் ஏர் இந்தியா விமானம் அவசரமாக லண்டன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.


பறவை மோதியதால் ஏர் இந்தியா விமானம் அவசரமாக லண்டன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து நேற்று ஏர் இந்தியா விமானம் 230 பயணிகளுடன் லண்டன் வழியாக நியூயார்க் புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் நடுவானில் விமானத்தின் மீது பறவை மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் முன்பகுதி மற்றும் ரேடார் சேதமடைந்துள்ளது.
இதையடுத்து ஏர் இந்தியா விமானம் அவசரமாக லண்டன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. உடனே பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து பத்திரமாக இறக்கப்பட்டனர். பிறகு அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு புறப்பட்டுச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...