

சியோல்: அணு ஆயுத சோதனை மைய சுரங்க விபத்தில் சமீபத்தில் நடந்த விபத்தொன்றில் 200 பேர் பலியானதாக வெளியான செய்திக்கு வடகொரியா உடனடியாக மறுப்பு தெரிவித்து உள்ளது.
வடகொரியா தனது ஆறாவது அணு ஆயுத சோதனையினை கடந்த மாதம் பியாங்யாங்கி என்ற இடத்தில் நடத்தியது. பரிசோதனை செய்த பின்னர் அங்குள்ள சுரங்கம் ஒன்று இடிந்து விபத்து உண்டானதாகவும், இதில் 200-க்கும் அதிகமானோர் பலியானதாகவும் என ஜப்பானின் அஷாகி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
ஆனால் இந்த தகவல் உண்மையல்ல என வடகொரியா அரசு ஊடகம் அதிகாரபூர்வமாக மறுத்து உள்ளது. அத்துடன் இது முற்றிலும் அவதூறு பரப்பும் நோக்கம் கொண்ட தவறான தகவல் என்றும் தெரிவித்து உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.