புதுதில்லி: உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வகை 'ஐபோன் X' விற்பனை இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இன்று முதல் துவங்குகிறது.
ஆப்பிள் நிறுவனத்தில் சிறப்பான தயாரிப்புகளில் ஒன்று ஐபோன். குறிப்பிட்ட கால இடைவேளைகளில் தொழில்நுட்ப வளர்ச்சிகளை உள்ளடக்கி புதிய வகை ஐபோன்களை அந்நிறுவனம் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வரிசையில் 'ஐபோன் X' எனும் புதிய வகை போனை அறிமுகம் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது
இந்த போனில் 5.8 இன்ச் அகல திரை, 2436x1125 பிக்சல் OLED சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே, முந்தைய போன்களிலிருந்த 'ஹோம் பட்டன்' வசதிக்கு பதிலாக அன்லாக் செய்ய 'ஃபேஸ் ஐடி' தொழில்நுட்பம், இதற்கான முக அங்கீகாரம் (face recognition) வழங்க டூயல்-கோர் நியூரல் இன்ஜின், ஃபேஸ் ஐடி துல்லியமாக வேலை செய்வதற்காக 'ட்ரூ டெப்த் கேமரா சிஸ்டம்', ஆப்பிள் A11 பயோனிக் சிப்செட், 12 எம்பி பிரைமரி டூயல் கேமரா, டூயல் OIS வசதி, ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி, அத்துடன் ஐபோன் 7 மாடலை விட இரண்டு மணி நேரம் கூடுதல் பேட்டரி பேக்கப் என அத்தனை சிறப்பம்சங்கள் இந்த போனில் அமைந்துள்ளன.
இந்த போன் ஸ்மார்ட்போன் 7000-சீரிஸ் அலுமினியம் ஃபிரேம், கிளாஸ் பேக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதிகளும் இந்த போனில் அமைந்துள்ளன..
64 ஜிபி நினைவாக வசதி கொண்ட ஐபோன் X விலை இந்தியாவில் ரூ.89,000 ஆக உள்ளது. அதேபோல 256 ஜிபி திறன் கொண்ட மாடல் விலை ரூ.1,02,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே நிறங்களில் கிடைக்கும் இந்த போனுடன் கூடுதல் உபகரணங்களான சிலிகான் மற்றும் லெதர் கேஸ்கள் தனியாக விலைக்கு கிடைக்கின்றன.
கடந்த வாரம் போனுக்கான முன்பதிவுகள் துவங்கிய நிலையில் குறிப்பிட்ட சில வங்கியின் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.10,000 வரை கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படுகிறது.
முன்பதிவு செய்யப்படாத நிலையில் ஏர்டெல் தளத்தில் ஐபோன் X நேரடி விற்பனை இன்று மாலை 6.00 மணிக்கு துவங்குகிறது. நாளை காலை 7.00 மணிக்குள் ஐபோன் X வாங்குவோருக்கு சிறப்பு கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பனப்பாக்கம் அரசு ஆண்கள் பள்ளிக்கு பசுமை சாம்பியன் விருது: ஆட்சியா் பாராட்டு

பாரபட்சமின்றி பட்டா வழங்கக் கோரி கோவில்பட்டியில் மக்கள் போராட்டம்

சாலையோர இரும்பு தடுப்பில் பைக் மோதி விபத்து: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மெய்நிகா் மாதிரி செயலி அறிமுகம்
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

