சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பாகிஸ்தான்: பேருந்து விபத்தில் 27 பேர் பலி

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 7:30 pm

DIN

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
ராய்விண்ட் நகரத்தில் நடைபெறவிருந்த மத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோகட் என்ற இடத்திலிருந்து 100 பேர் பேருந்தில் புறப்பட்டனர். அவர்கள் சென்ற பேருந்து கல்லர் காஹர் என்ற இடத்தில் நிலைதடுமாறி பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. புதன்கிழமை இரவு நடந்த இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 24 பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர். காயமடைந்த 69 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
விபத்துக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு, மிதமிஞ்சிய வேகத்தில் சென்றதே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பஞ்சாப் மாகாண முதல்வர் ஷெபாஸ் ஷெரீஃப் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.