சிறைச்சாலையை ஆயுதங்களுடன் தாக்கிய கும்பல்: போலீஸாருடனான மோதலில் 20 கைதிகள் பலி!
பிரேசில் நாட்டில் சிறைச்சாலையில் உள்ள கைதிகளை மீட்க ஆயுதங்களுடன் சிறையைத் தாக்கிய கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையிலான மோதலில் 20 கைதிகள் பலியானார்கள்.


ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நாட்டில் சிறைச்சாலையில் உள்ள கைதிகளை மீட்க ஆயுதங்களுடன் சிறையைத் தாக்கிய கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையிலான மோதலில் 20 கைதிகள் பலியானார்கள்.
பிரேசில் நாட்டின் பாரா ஸ்டேட் மாகாணத்தில் 'சாண்டா இசபெல்' என்னும் பெரிய சிறைச்சாலை உள்ளது. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கைதிகள் இங்கே அடைக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில் ஆயுதங்களைத் தாங்கிய கும்பல் ஒன்று, இந்த சிறைச்சாலையை உடைத்து அங்குள்ள கைதிகளை மீட்க முயற்சித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசாருக்கும் அந்த கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 கைதிகள் உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...