பாக்தாத்: ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்போடு தொடர்புடைய 300 க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .
ஈராக் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக அந்த நாட்டின் மூன்றிலொரு பங்கு அவர்களது கட்டுப்பாட்டிலிருந்து வந்தது. இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பரில் ஐ.எஸ். அமைப்பினரை முழுமையாக வென்று விட்டோம் என ஈராக் அரசு அறிவித்தது.
இந்நிலையில் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்போடு தொடர்புடைய 300 க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .
இதுபற்றி அந்நாட்டு நீதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜனவரியில் இருந்து 97 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் 185 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
இவர்களில் பெரும்பாலோனோர் பெண்கள். இவர்கள் அனைவரும் துருக்கி மற்றும் முன்னாள் சோவியத் யூனியன் குடியரசு நாடுகளை சேர்ந்தவர்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தற்பொழுது மொசூல் நகர் அருகே டெல் கீப் பகுதியிலுள்ள நீதிமன்றம் ஒன்றில் 212 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 150 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 341 பேருக்கு பிற சிறை தண்டனைகளும் விதிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் அரைசதம்; சன்ரைசர்ஸுக்கு 169 ரன்கள் இலக்கு!

முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய கோரிக்கை!

ஹூண்டாய் ஐயோனிக் 5 பேஸ்லிப்ட் அறிமுகம்!

தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு! நாளை எப்போது நடக்கும்?
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

