காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

1எம்டிபி' முறைகேடு : சர்ச்சைக்குரிய சொகுசுப் படகு மலேசியாவிடம் ஒப்படைப்பு

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் ஆட்சி காலத்தில் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்படும் 1எம்டிபி' முறைகேடு தொடர்புடைய சொகுசுப் படகை, அந்த நாட்டு அரசிடம் இந்தோனேசியா ஒப்படைத்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:56 pm IST


மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் ஆட்சி காலத்தில் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்படும் 1எம்டிபி' முறைகேடு தொடர்புடைய சொகுசுப் படகை, அந்த நாட்டு அரசிடம் இந்தோனேசியா ஒப்படைத்துள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2018 மே மாதம் 10-ஆம் தேதி வரை மலேசியாவின் பிரதமராக பொறுப்பு வகித்து வந்த நஜீப் ரஸாக், தனது ஆட்சிக் காலத்தின்போது நாட்டில் தொழில் பெருக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும், அந்நிய நேரடி முதலீடுகளை கவர்வதற்காகவும் 1 மலேசியா மேம்பாட்டு நிறுவனம்' (1எம்டிபி) என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த நிலையில், 1எம்டிபி நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட 267 கோடி மலேசிய ரிங்கிட் (சுமார் ரூ.4,150 கோடி) பிரதமர் நஜீபின் சொந்த வங்கிக் கணக்குக்கு முறைகேடாக மாற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, மே மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் நஜீப் தோல்வியடைந்தார். இந்த நிலையில், மகாதிர் முகமது (92) புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, நஜீப் இல்லத்தில் போலீஸார் மே மாதம் 16-ஆம் தேதி நள்ளிரவு அதிரடி சோதனை நடத்தி ஏராளமான ஆடம்பரக் கைப்பைகளில், பணம், விலையுயர்ந்த ஆபரணங்கள், கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். அதன் தொடர்ச்சியாக, தேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நஜீப் ரஸாக்கை கடந்த மாதம் கைது செய்தது.
இந்த நிலையில், 1எம்டிபி ஊழலுடனும், நஜீபுடனும் தொடர்புடைய ஒருவர் வாங்கிய 25 கோடி டாலர் (சுமார் ரூ.1,719 கோடி) மதிப்பிலான சொகுசுப் படகை , இந்தோனேசிய அதிகாரிகள் பாலி தீவில் பறிமுதல் செய்தனர்.
ஈகுவனாமிட்டி' என்று பெயரிடப்பட்ட அந்தப் படகை, 1எம்டிபி வழக்கு தொடர்பாக தங்களிடம் ஒப்படைக்குமாறு மலேசிய அரசு கோரி வந்தது. அந்தக் கோரிக்கையை ஏற்று, அந்த சொகுசுப் படகு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பிரதமர் மகாதிர் முகமது திங்கள்கிழமை தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.