பாகிஸ்தான் நாட்டு முக்கிய பிரபலங்கள் அரசு செலவில் முதல் வகுப்பில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு கூறிய பிரதமர் இம்ரான் கான், வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு ஹெலிகாப்டரில் சென்றிருப்பது கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 பேர் அமரக்கூடிய ஹெலிகாப்டர் மூலமாக இம்ரான் கான் தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு பயணம் செய்திருக்கும் தகவல் அறிந்த எதிர்க்கட்சிகள் கடுமையான விமரிசனத்தை முன் வைத்துள்ளன.
இதே போல, தங்களது வீட்டில் இருந்து, பிரதமர் அலுவலகத்துக்கு வரும் போதும் இம்ரான்கானும், அவரது மனைவியும் ஹெலிகாப்டரையே பயன்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைத்தளங்களில் இது பற்றி வரும் குற்றச்சாட்டுகளுக்கு இம்ரான் கான் கட்சியின் மூத்தத் தலைவர் மொஹம்மது அலி கான் கூறியிருப்பதாவது, பிரதமர் இம்ரான் கானை விமரிசிப்பவர்களுக்கு ஒரு தகவலை தெரிவிக்க விரும்புகிறேன். பிரதமரின் வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு ஹெலிகாப்டர் பயன்படுத்துவதுதான் செலவைக் குறைக்கும். வெறும் 3 நிமிடம் பயணிக்க குறைந்த எரிபொருளே செலவாகும். ஆனால் சாலை வழியில் பிரதமர் செல்வதாக இருந்தால் அவருக்கு பாதுகாப்புக்கு 5 முதல் 7 வாகனங்களில் பாதுகாப்புப் படையினர் உடன் செல்ல வேண்டியிருக்கும். அதில்லாமல், ஹெலிகாப்டர் பயணம் பாதுகாப்பானதும் கூட. பிரதமர் வருகையால் சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்படாது என்று கூறியுள்ளார்.
முன்னதாக,
பாகிஸ்தானில், உயரதிகாரிகள் அரசு செலவில் முதல் வகுப்பு விமானப் பயணம் மேற்கொள்வதற்கு இம்ரான் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு தடை விதித்திருந்தது.
பிரதமர், அதிபர் போன்ற தலைவர்களுக்கும் இந்த சலுகை மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரதமர் இம்ரான் கான் தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாவத் செளத்ரி கூறியதாவது: பிரதமர், அதிபர் உள்ளிட்ட எந்த அரசுத் துறை உயரதிகாரிகளும், அரசின் செலவில் முதல் வகுப்பு விமானப் பயணம் மேற்கொள்வதற்குப் பதில் இரண்டாவது வகுப்பிலேயே பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று இம்ரான் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் முடிவு செய்தது.
அதுமட்டுமன்றி, சொந்த செலவுகளுக்காக பிரதமர், அதிபர் மற்றும் பிற உயரதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைத் தொகையையும் ரத்து செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பது.
இத்தகைய சலுகைத் தொகை மூலம் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஆண்டுக்கு ரூ.5,100 கோடியை தனது சொந்த செலவுகளுக்காகப் பயன்படுத்தியுள்ளார் என்றார் அவர்.
பிரதமர் பொறுப்பை ஏற்பதற்கு முன்னதாக, பாகிஸ்தானின் பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக பல்வேறு சிக்கன நடவடிக்கைகளே மேற்கொள்ளப்போவதாக அவர் அறிவித்திருந்தார். அந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாகப் பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் மற்றவர்களுக்கு சொல்லிய அறிவுரையை தான் பின்பற்றாமல் இருந்திருப்பது தற்போது கேள்வியை எழுப்புகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமித் ஷா விளக்கம் அளிக்கும் வரை நாடாளுமன்ற முடக்கம் தொடரும்: பிரியங்கா காந்தி!

தவெக அரசு சரணாகதி அடையத் தயாராக இருக்க வேண்டும்: கிருஷ்ணசாமி பேட்டி

சிறப்பான கிளைமேக்ஸ்... வினோதினி தொடர் 367 நாள்களுடன் நிறைவு!

உத்தரகண்டில் மிதமான நிலநடுக்கம்! மக்கள் பீதி!
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! பேரவையில் முதல்வர் Vijay பேச்சு! | TN Assembly | TVK



