ஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகங்களை குறிவைத்து திங்கள்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43-ஆக உயர்ந்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காபூலில் அரசுத் துறை அலுவலகங்கள் நிறைந்த பகுதிக்கு திங்கள்கிழமை காரை ஓட்டி வந்த பயங்கரவாதி அதனை வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் நடத்தினார்.
அதையடுத்து, மேலும் சில பயங்கரவாதிகள் துப்பாக்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில், காவல் துறை அதிகாரி ஒருவர் பலியானதாக முதலில் தகவல்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43-ஆக உயர்ந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்று, அவர்களிடம் சிக்கியிருந்த 350-க்கும் மேற்பட்ட பணியாளர்களை பாதுகாப்புப் படையினர் பத்திரமாக மீட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

கூட்டணியே தேவை இல்லை என்பதை விரைவில் பரிசீலிப்போம்: மு.க. ஸ்டாலின்

குடை எடுத்துச் செல்லுங்கள்.. அடுத்த 2 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

ஹைதியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது மொராக்கோ!
விடியோக்கள்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP


