உலகின் பரபரப்பான விமான நிலையம்: துபை முதலிடம்
கடந்த 2017-ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் பரப்பரப்பான விமான நிலையங்கள் பட்டியலில் துபை விமான நிலையம் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.


கடந்த 2017-ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் பரப்பரப்பான விமான நிலையங்கள் பட்டியலில் துபை விமான நிலையம் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான 'வாம்' தெரிவித்துள்ளதாவது:
2017-ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் பரபரப்பாக காணப்பட்ட விமான நிலையங்களின் பட்டியலில் துபை முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக துபை இந்தப் பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இந்த விமான நிலையம் 8.82 கோடி பயணிகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது.
அமெரிக்கா செல்லும் விமானங்களில் தாற்காலிகமாக மடிக்கணினி பயன்படுத்த தடைவிதிக்கப்பட்ட நிலையிலும், கடந்த 2016-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 46 லட்சம் அதிகரித்துள்ளது என அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...