தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

எகிப்து ராணுவத்தின் தீவிரவாத வேட்டை: 12 பேர் பலி 

தீவிரவாதிகளுக்கு எதிராக எகிப்து ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 11:30 am

DIN

கெய்ரோ: தீவிரவாதிகளுக்கு எதிராக எகிப்து ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதி முதல் எகிப்து நாட்டில் தீவிரவாத தாக்குதல் மற்றும் வெடிகுண்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து மூன்று மாதங்களில் தீவிரவாதிகளை ஒழிக்கும்படி ராணுவத்துக்கு அந்நாட்டு அரசு கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டது.

அதன் ஒரு பகுதியாக எகிப்து பாதுகாப்பு படையினர் சினாய் தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களைக் குறி வைத்து தீவிர தாக்குதல் நடத்தினர்.

இந்த திடீர் தாக்குதலில் 60 தீவிரவாதிகளின் இருப்பிடங்கள் குறிவைத்து அழிக்கப்பட்டுள்ளன. 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.  92 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த தகாவல்கள் அனைத்தும் எகிப்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.