திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

அமெரிக்க ராணுவத் தளத்துக்கு வந்த மர்ம கடிதம்: பிரித்துப் பார்த்தவர்களுக்கு உடல்நல பாதிப்பு! 

அமெரிக்காவில் ராணுவத் தளம் ஒன்றுக்கு வந்த மர்ம கடிதத்தினை பிரித்துப் பார்த்தவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:51 pm IST

வாஷிங்டன்: அமெரிக்காவில் ராணுவத் தளம் ஒன்றுக்கு வந்த மர்ம கடிதத்தினை பிரித்துப் பார்த்தவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தின் ஆர்லிங்டன் நகரில் ராணுவ தளம் ஒன்று அமைந்துள்ளது.  இங்குள்ள அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று அஞ்சல் உறையுடன் அனுப்பப்பட்டு உள்ளது. அதன் உள்ளே மர்ம பொருள் ஏதோ இருந்துள்ளது.

அந்த கடிதத்தினை அங்கு பணியிலிருந்த ஊழியர்கள் வாங்கிப் பிரித்துள்ளனர். அப்பொழுது ஏற்பட்ட மாற்றத்தினால் அலுவலகத்தில் இருந்தவர்களுக்கு ஒரு அசவுகரியமான உணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கிருந்த 11 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது. 

உடனடி பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த கட்டிடத்தில் இருந்த அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்களில் மிகவும் சோர்வாக உணர்ந்தவர்கள் 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

தற்பொழுது அவர்களது நிலைமை சீராக உள்ளது என்று ராணுவத் தளத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.