திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு: பாக். தேர்தலில் இம்ரான் கட்சி வாக்குறுதி

பாகிஸ்தானில் வரும் 25-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தெஹ்ரிக் - இ - இன்சாஃப் கட்சியின் தேர்தல் அறிக்கையை, அதன் தலைவர் இம்ரான் கான் திங்கள்கிழமை

Updated On :9 ஜூலை 2018, 10:49 pm

பாகிஸ்தானில் வரும் 25-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தெஹ்ரிக் - இ - இன்சாஃப் கட்சியின் தேர்தல் அறிக்கையை, அதன் தலைவர் இம்ரான் கான் திங்கள்கிழமை வெளியிட்டார். அதில், வாக்காளர்களைக் கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், 50 லட்சம் வீடுகள் மலிவு விலையில் ஏழைகளுக்கு கட்டித் தரப்படும் என்றும் இம்ரான் கான் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, காவல் துறைக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கப் போவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் தலையீடு இன்றி காவல் துறையினர் சுதந்திரமாகப் பணியாற்றும் சூழல் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், முறைகேடுகள் மற்றும் ஊழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமைப்பு உருவாக்கப்படும் என்றும், அதன் வாயிலாக பாரபட்சமற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் கொள்கைகளை முன்னெடுக்கப் போவதாகவும் இம்ரான் கான் கட்சி அறிவித்துள்ளது.
ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை ஏற்கெனவே தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.