பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள அமெரிக்கத் தூதரத்தின் வெளியே குண்டு வெடிப்பு 

சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள அமெரிக்கத் தூதரத்தின் வெளியே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

News image
Updated On :26 ஜூலை 2018, 7:27 am

பீஜிங்: சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள அமெரிக்கத் தூதரத்தின் வெளியே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனத் தலைநகர் பீஜிங்கின் கெயாங் மாவட்டத்தில் அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ளது. அங்கு பெரும்பாலான சீன மக்கள் வழக்கமாக அமெரிக்க விசா பெறுவதற்காக வரிசையாக நிற்கும் இடத்தின் அருகே, உள்ளூர் நேரப்படி வியாழன் மதியம் 1 மணி அளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் சிலருக்கு காயங்கள் உண்டாகியுள்ளதாக நேரடி சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.

அந்த கட்டடத்தின் புகை மூட்டம் சூழ்ந்த பகுதியைக் காண்பிக்கும் புகைப்படங்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

அதேசமயம் அந்த இடத்தில் தன் மேல் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முயன்ற பெண் ஒருவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றதாக சீனா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த பகுதியைச் சுற்றி போலீசார் பாதுகாப்பு வளையத்தை உண்டாக்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.