2009க்குப் பிறகு தாய்லாந்தில் முதல் மரண தண்டனை நிறைவேற்றம்

கடந்த 2009ம் ஆண்டுக்குப் பிறகு, கொலைக் குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது தாய்லாந்து நாட்டு நீதித்துறை.
2009க்குப் பிறகு தாய்லாந்தில் முதல் மரண தண்டனை நிறைவேற்றம்
Updated on
1 min read


பாங்காக்: கடந்த 2009ம் ஆண்டுக்குப் பிறகு, கொலைக் குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது தாய்லாந்து நாட்டு நீதித்துறை.

தீரசக் லோங்ஜி (26) என்ற கொள்ளை மற்றும் கொலைக் குற்றவாளிக்கு உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் மரண தண்டனை விதித்ததைத் தொடர்ந்து தற்போது, விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு ஒருவரின் செல்போன் மற்றும் பணப்பையை பறித்துக் கொண்ட லோங்ஜி, அவரை 24 முறை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இந்த குற்றத்துக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தாய்லாந்தில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வந்த நிலையில், 2003ம் ஆண்டு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படும் 7வது நபர் லோங்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com