வட மற்றும் தென் கொரியா நாடுகளிடையே ரயில் இணைப்பை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையை இரு நாட்டு அதிகாரிகளும் எல்லை கிராமமான பான்முன்ஜோமில் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையே தற்போது இணக்கம் அதிகரித்துள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, கொரியப் போருக்கு முன்னர், ஜப்பான் ஆக்கிரமிப்பில் இருந்தபோது இரு கொரிய நாடுகளுக்கும் இடையே இருப்புப் பாதை போடப்பட்டுள்ளது.
எனினும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போடப்பட்ட அந்தப் பாதையை புனரமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தற்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் வாகன காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்

ரூ.950 கோடி சம்பளம் வாங்கிய ஹாலிவுட் நடிகர்..! மார்வெல் திரைப்படங்களிலே அதிகம்!

மும்பையில் பல கோடி மதிப்பில் வீடு கட்டிய பூஜா ஹெக்டே!

ஒரே இடத்தில் இவ்வளவு அசிங்கத்தைப் பார்த்ததில்லை: மாணவர்களை விமர்சித்த கங்கனா!
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்


