அல்ஜீரியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட அகதிகளின் அவல நிலை!

நூற்றுக்கணக்கான அகதிகள் பாலைவனத்தின் கொடும் வெயிலில் பரிதவித்து வரும் காட்சி அண்மையில்
அல்ஜீரியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட அகதிகளின் அவல நிலை!
Published on
Updated on
1 min read

நூற்றுக்கணக்கான அகதிகள் பாலைவனத்தின் கொடும் வெயிலில் பரிதவித்து வரும் காட்சி அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மீடியாக்கள் பதிவு செய்யும் முன் பல சமயம் ட்விட்டர், இன்ஸ்டாகிரம, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இத்தகைய செய்திகள் வெளிவந்து கடும் அதிர்வலைகளை உருவாக்கி வருகின்றன. 

மேற்சொன்ன சம்பவம் அல்ஜீரியாவில் நடந்துள்ளது. அங்கு தஞ்சம் புகுந்த சுமார் 13,000 அகதிகளை உணவு மற்றும் தண்ணீர் ஏதும் இன்றி சஹாரா பாலைவனத்திற்கு துரத்தியதாக செய்தி பரவியது. ஆனால் அதற்கு அந்நாடு மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால் பெண்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக கொடும் வெயிலில் வாழ்வாதாரம் இழந்து நடந்து செல்லும் காட்சி காண்போரின் மனத்தை துயரடையச் செய்யும் வகையில் உள்ளது. அந்தப் புகைப்படங்களில் பலர் உணவு மற்றும் நீரின்றி மரணமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பலர் சாஹார பாலைவனத்தில் காணாமல் போனதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. அல்ஜீரியா இதுவரை தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றிய அகதிகளின் எண்ணிக்கையை வெளியிடவில்லை என்றாலும் கடந்த ஒரே வருடத்தில் மட்டும் வெளியேற்றப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை 2,888 என அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மீட்பு குழுவினர் அகதிகளை மீட்கிறார்கள் தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2017-ம் ஆண்டில் இருந்தே அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் அல்ஜீரிய அரசு ஈடுபட்டு வருகிறது. அகதிகளைப் பாதுகாக்கவென 2014-ம் ஆண்டு 2017-ம் ஆண்டு வரை அகதிகள் மேம்பாட்டுக்காக ஐரோப்பாவில் இருந்து சுமார் 111.3 மில்லியன் டாலர் உதவித் தொகையாகப் பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com