அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஆப்கானிஸ்தானில் புறக்காவல் நிலையத்தில் தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்: 10 போலீசார் பலி! 

ஆப்கானிஸ்தானின் வடக்கு தாகர் மாகாணத்தில் அமைந்துள்ள புறக்காவல் நிலையம் ஒன்றில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போலீஸ்காரர்கள் மரணமடைந்தனர்.

News image
Updated On :9 மார்ச் 2018, 2:03 pm

DIN

காபூல்: ஆப்கானிஸ்தானின் வடக்கு தாகர் மாகாணத்தில் அமைந்துள்ள புறக்காவல் நிலையம் ஒன்றில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போலீஸ்காரர்கள் மரணமடைந்தனர்.

இந்த தீவிரவாத தாக்குதல் குறித்து வடக்கு தாகர் மாகாண செய்தித்தொடர்பாளர் காலீ அசெய்ர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வடக்கு தாகர் மாகாணத்திலுள்ள குவாஜாஹார் மாவட்டத்தில் அமைத்துள்ள புறக்காவல் நிலையம் ஒன்றின் மீது வெள்ளியன்று அதிக எண்ணிக்கையில் தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களை எதிர்த்து தாக்குதலில் ஈடுபட்ட ஆப்கான் ராணுவத்தினருக்கு, குவாஜாஹா ர் மாவட்ட உள்ளூர் போலீசாரும் உதவினார்.

ஆயினும் இந்த பயங்கரத் தாக்குதலில் 10 உள்ளூர் போலீசார் பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர். ஆனால் ராணுவத்தினர் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹூல்லா முஜஹித் அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.