வடமேற்கு பாகிஸ்தானின் கைபர்-பாக்துன்கவா மாகாணத்தில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.5 என்ற அலகில் பதிவான இந்த நிலநடுக்கத்தால், சில வீடுகள் சேதமடைந்தன. 9 சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
பன்னு நகரை மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 12 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பெஷாவர், ஸ்வாட் பள்ளத்தாக்கு வரை நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்டது. ஆப்கானிஸ்தான் எல்லையோரப் பகுதியிலும் லேசான நில அதிர்வு இருந்தது.
நில நடுக்கத்தால் பல வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. ஆனால், வீடுகள் இடிந்து விழுந்ததாகத் தகவல் இல்லை. அதே நேரத்தில் ஒரு பள்ளியில் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பதற்றத்தால் 3 ஆவது மாடியில் இருந்து அவசரமாக மாணவர்கள் கீழே இறங்கினர். அப்போது 9 சிறுவர்கள் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, இதே பகுதியில் கடந்த மாதமும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும் பல வீடுகள் சேதமடைந்தன. தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






